தொடக்கம்…

எதையாவது ஒன்றைச் செய்ய ஆரம்பியுங்கள். எழுத, வாசிக்க. ஒன்றை எழுதும் ஊக்கம் உடனடியாக வரவில்லை என்றால் ஒரு நல்ல நூலை மொழிபெயர்க்க ஆரம்பியுங்கள். அது உங்களை மொழிக்குள் கொண்டுசெல்லும். எழுதவும் தூண்டும். ஆரம்பகால தடையை மட்டும் பல்லைக்கடித்து தாண்டிவிட்டோமென்றால் செயல் உங்களை ஈர்த்து உள்ளே கொண்டுசெல்லும். இப்போது உங்களுக்கு தேவை செயல் மட்டுமே.

– ஜெயமோகன்

கேள்விகள்‌ஆயிரமிருந்தாலும், முதலில் தொடங்குவோம்… செயலின்மையிலிருந்து செயலுக்கு!

இந்த தளமே ஒரு தொடக்கம் தானே!

செய்ய வேண்டியவை நிறைய உள்ளது…

pizhaikal.inயை முழுதாக‌ godaddyக்கு மாற்றி, ஒரு முகப்பு பக்கம் அமைக்கும் வேலை…

எனது அறையை எனக்கு உரியதாக மாற்றும் வேலை…

வாங்கிய புத்தகங்களை வகைப்படுத்தும் வேலை…

அடுத்த மாத MA தேர்வுக்கு படிக்கும் வேலை…

vmw.thiru.in வெண்முரசு விக்கிபீடியா குறித்த வேலைகள்…

அதற்கடுத்த மாதம் CFA பட்டய தேர்வுக்கு படிக்கும் வேலை…

உடல் நலம் குறிதது செய்ய வேண்டிய வேலைகள்.. உடல் எடை, தலைவலி (தொற்று)…

முக்கியமாக அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகள்…

எதையுமே செய்யாமல் இருப்பது எளிதாக உள்ளது…. செய்ய தொடங்கினால், இத்தனை விஷயங்களா என மலைப்பாக உள்ளது..‌

சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை.சும்மா இருக்கத்தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச்செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதை எப்போதும் செய்துகொண்டிருக்கவேண்டும்.

– ஜெயமோகன்

செய்வோம்!

One thought on “தொடக்கம்…”

Leave a Reply

Your email address will not be published.